‘அக்ரி’யை புறக்கணிக்கும் திருவண்ணாமலை அதிமுகவினர்… தலைமை அதிர்ச்சி…

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணா மலை தொகுதியில் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.  இவர்மீது அந்த பகுதி அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாமதமாக வந்தார், பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், கூட்டத்தை விட்டு வெளியேறினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

திருவண்ணாமலை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்  ஜோலார் பேட்டையில் நடைபெற்றது.  அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை தொகுதியை சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் ஜோலார்பேட்டையில் குவிந்தனர்.

நேரம் ஆக ஆக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூட்டத்துக்கு வராததால்,அதிமுகவினர் முனுமுனுக்கத் தொடங்கினர். பலர் அங்கிருந்து எஸ்கேப்பாகினர்.

‘இந்நிலையில், இரவு 9.30 மணிக்கு வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜோலார்பேட்டை வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வெளியேறி இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான  வந்ததற்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்னும் மினிஸ்டர் என்ற நினைப்பில் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே, அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அவருக்கு வழங்கப் பட்ட அமைச்சர் பதவி பிடுங்கி நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் அதிமுக பொதுச்செய லாளர் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட அக்ரிக்கு, ஓபிஎஸ், ஈபிஎஸ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளி டையே பெரும் அதிப்தியை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய செயல், அவர்மீதான வெறுப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திருவண்ணா மலை, விளாத்திக்குளம், பெரியகுளம் போன்ற பகுதியில் அதிமுக வேட்பாளர்களுக்கு அதிமுக கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.