திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலபாதை ஓரத்தில் அமைந்துள்ள பழமையான  ரமணாஸ்ரமத்தின்  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி தொழிலாளர்கள்  2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவுர்ணமி நாளின்போது, அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்கின்றனர்.  இதன் காரணமாக ஜன நெருக்கடி ஏற்படுகிறது. அதையடுத்து, கிரிவலம் செல்லும் பாதையை அகலப்படுத்தும் பணி ரூ.65 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

கிரிவலப்பாதையின் ஓரத்தில் ரமண மகிரிஷியின் ஆஸ்ரமமான ரமணாஸ்ரமம் உள்ளது. இன்று அந்த பகுதியில் விரிவாக்கப்பணியின் காரணமாக மழைநீர் வடிகால் அமைப்பதற்காக கால்வாய் தோன்றும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக ரமணாஸ்ரமத்தில் சுற்றுச்சுவடர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த4   தொழிலார்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே மற்ற 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆஸ்ரம சுற்றுச்சுவர் இடிந்து 2 பேர் பலியான விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.