சென்னை:  
திருவாருர் வலங்கைமானில் 30 ஆயிரம் டன் திறனுள்ள  அரிசி அரவை ஆலை 20 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும், ரூபாய் 13.43 கோடி செலவில் மின்னணு நெல் கொள்முதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
tnas
தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து அறுவடையாகும் நெல்-லை கொள்முதல் செய்ய மாவட்டம்தோறும் அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்துவருகிறது.
இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கும், அதிகாரிக்கும் இடையே பிரச்சினைகள் எழுவதுண்டு.
இதுபோன்ற பிரச்சினைகளை போக்க நெல் கொள்முதல் நிலையங்களில் எலக்ட்ரானிக் தராசு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து உள்ளார்.
இன்று விதி எண் 110-ன் கீழ் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு பற்றிய விவரம்:
நெல்
நேரடி நெல் கொள்முதல் மையங்களில் எடை குறைவு பிரச்சனை, பணம் தருவதில் தாமதம் உள்ளிட்ட குறைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை போக்க மின்னணு நெல்கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
இதன் மூலம் விவசாயிகளின் விவரங்கள், நெல் கொண்டு வர வேண்டிய நாள் உள்ளிட்ட குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார். இந்த புதிய திட்டம் ரூ.13.43 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.  மேலும் நெல் கொள்முதல் மையங்களில் மின்னணு எடை இயந்திரம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ரூ.20 கோடி மதிப்பில் 30 ஆயிரம் டன் திறனுடைய அரிசி அரவை ஆலை அமைக்கப்படும் என்றும் பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார்.