திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் நேர் காணல் தேதி அறிவிப்பு

சென்னை:

னவரி 28ந்தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான  ஜனவரி 4ம் தேதி நடைபெறும் திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஜனவரி 4-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும்.

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம்.

வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும், விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ. 1000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You may have missed