கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திருவாரூர் அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

திருவாரூர்:

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என்று அவர் படித்த திருவாரூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிறு நீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரண மாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

கருணாநிதி பயின்ற திருக்குவளை அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், திமுக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர். பல இடங்களில், கருணாநிதி குணமடைய வேண்டிய சிறப்புபூஜைகள் செய்து வருகின்றனர்.

பல பள்ளிகளில் மாணவ மாணவிகள் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கூட்டுப் பிரார்த் தனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்கள் இன்று பள்ளி தொடங்கியதும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும், அதே ஊரில் அமைந்துள்ள முத்துவேளர் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்க ளும் கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.