திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா: நகராட்சி அலுவலகம் மூடல்

சென்னை: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.

இன்றைய தினம் திருவேற்காட்டில் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் செந்தில் குமாருக்கு கொரோனா அறிகுறி இருந்ததன் காரணமாக அவருக்கும் சோதனை செய்யப்பட்டது.

முடிவில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி