சென்னை – கொரோனா மரணத்தில் திருவொற்றியூர் மண்டலம் முதலிடம்!

--

சென்னை: தமிழக தலைநகரில், கொரோனா தொடர்பான அதிக மரண எண்ணிக்கை விகிதத்தில், திருவொற்றியூர் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த சென்னையின் கொரோனா மரண விகிதம் 1.66% என்ற நிலையில், திருவொற்றியூர் பகுதியில் அந்த விகிதம் 2.32% என்பதாக உள்ளது. அந்த மண்டலத்தில் மொத்தம் 73 மரணங்கள் பதிவாகியுள்ளது.

அதேசமயத்தில், கடந்த மாதம் 26 மரணங்களுடன், 1.93% என்பதாக பதிவாகியது.

சென்னையைப் பொறுத்தவரை, அதிக கொரோனா தொற்றுகள், தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பதிவாகியிருந்தாலும், அங்கெல்லாம் திருவொற்றியூரை ஒப்பிடுகையில், இறப்பு விகிதங்கள் குறைவு.

தண்டையார்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், முறையே 191 மற்றும் 206 இறப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், மரண விதிகம் 2.21% என்பதாக கணக்கிடப்படுகிறது.