கேலிக்கூத்தான ஜி.எஸ்.டி அமல்: ப.சிதம்பரம் விமர்சனம்

டில்லி:
இந்தியாவில் கேலிக்கூத்தான வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

டில்லியில் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முழுமையானது அல்ல. ஜிஎஸ்டி என்பதே கேலிக்கூத்தாகியுள்ளது. இது இந்தியாவின் மறைமுக வரி திட்டம் என்று தான் கூற வேண்டும்.

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியை ஒரு நாட்டு ஒரு வரி என கூறமுடியாது. 7க்கும் மேற்பட்ட வரி விகிதங்கள் தற்போது உள்ளன. அதிகபட்ச வரியை 18 சதவீதமாக குறைப்பதற்கு காங்கிரஸ் நெரு க்குதல் கொடுக்கும்’’ என்றார்.

ப.சிதம்ரம் தொடர்ந்து கூறுகையில், ‘‘மேலும் பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். தற்போது அமல்படுத்தி இருக்கும் சட்டம் முழுமையானது அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி பரிந்துரைத்தது இதுவல்ல.

தற்போது 0.25, 3,5,12,18,28 மற்றும் 40 சதவீதம் என வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுதவிர மாநில அரசுகளுக்கும் வரி விதிக்கும் அதிகாரம் இருக்கிறது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராகவில்லை என்பதையும் இரு ம £தங்களுக்கு தள்ளிப்போட வேண்டும் என்று வலியுறுத்தியதையும் இந்த அரசு கேட்கவில்லை. பெரும்பால £ன ஓட்டல்களில் இன்னமும் சாதாரன பில்களை தான் வழங்கப்படுகிறது. சரியான பில்களை பெரும்பாலான ஓட்டல்கள் வழங்குவது கிடையாது.

ஜி.எஸ்.டி விரைந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீத பொருட்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இது கூடுதல் சுமையாகும். இதனால பணவீக்கம் ஏற்படும். ஜிஎஸ்டியை உருவாக்கியதும் காங்கிரஸ்தான். உண்மையான ஜிஎஸ்டியை கொண்டு வரப்போவதும் நாங்கள்தான். இதற்காக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்’’என்றார்.