கொழும்பு:
லங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு வசித்து வரும் வனவிலங்குகள் அனைத்தும் இருப்பிடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றன. மேலும் தொழிற்சாலை கழிவுகள் பசுமைக்குடில் வாயுக்கலால் ஏற்படும் பருவநிலை மாற்றம் வனப்பகுதிகளில் வறட்சியை ஏற்படுத்தி வன உயிரிகளுக்கு உணவுப்பற்றாக்குறையை உண்டாக்கி வருகிறது.

இதனால் ஏரளமான வனவிலங்குகள் உணவு கிடைக்காமல் மக்கள் வாழும் பகுதிகள் உணவு தேடி வளம் வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் உள்ள ஒரு குப்பை மேட்டில் யானைகள் கூட்டமாக உணவுக்காக சுற்றித்திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அம்பாராவின் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே யானைகள் உணவுக்காக சுற்றித்திரிகின்றன. உணவு கிடைக்காமல் யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் நோய்வாய்ப்பட்டு இறப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் குப்பை கொட்டுவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

யானைகள் குப்பை மேடுகளில் வலம் வருவது தொடர்பான புகைப்படங்களை 14 வயதே ஆன புகைப்பட கலைஞர் அஸ்வின் கீர்த்தனு என்பவரால் எடுக்கப்பட்டது. புகைப்பட போட்டிக்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.