சென்னை:

மிழக விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான இந்தியா அணிக்கும், ஆஸ்திரேலிய நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற நட்பு கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.

ஆஸ்திரேலிய நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள் குழுவினருடனான நட்பு சார்ந்த கிரிக்கெட் போட்டி போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்டது.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  10 ஓவர்கள் கொண்ட இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாடிய அணிக்கு மாநில அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைப் பொறுப்பு வகித்தார்.ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அந்நாட்டின் ப்ளாக்டவுன் நகர மேயர் ஸ்டீபன் பாலி செயல்பட்டார்.

அவருடன் முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் நாதன் ரீஸ், ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரிகள், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய அணியில் முருகப்பா குழுமம், எம்.ஆர்.எஃப், ஸ்ரீ ராமச்சந்திரா, பாலிஹோஸ், நெட்மெட்ஸ், ராம்கோ, லிங்க் லாஜிஸ்டிக்ஸ், வேல்ஸ் மற்றும் விஐடி கல்வி நிறுவனங்கள், சத்யஜோதி பிலிம்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.

மொத்தம் 10 ஓவர்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணியினரும் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டி சமனில் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டது.