டெஹ்ரான்:

சர்வதேச போட்டியில் வென்று நாட்டுக்காக பெருமை சேர்த்தால் அந்த வீரர் எப்படி எல்லாம் கொண்டாடப்படுவார்?


பதக்கத்தோடு வரும் தம் வீரரை ராஜ மரியாதையோடு வரவேற்கும் நாடுகள் எல்லாம் உள்ளன.

ஏன், வெற்றியை கொண்டாட விடுமுறை அறிவிக்கும் நாடுகளும் உள்ளன.

இதெல்லாம் நடப்பது எங்கோ…ஈரானில் அல்ல.

தன் விளையாட்டு வீரர் வாங்கிய பதக்கம் கண்ணுக்கு தெரியவில்லை..விளையாடும்போது அந்த பெண் போட்டிருந்த ஆடை தான் தெரிந்திருக்கிறது.

ஆம். சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி சாவின்னை வென்று பதக்கம் பெற்றார் ஈரான் நாட்டு வீரர் சதார் காதீம்.

நாட்டுக்கு புகழ் சேர்த்த ஈரானிய பெண்மணி சதார் காதீமுக்கு ஈரான் திரும்ப என்ன செய்தது?
அவரை கைது செய்வதற்கான வாரண்டை தயாராக வைத்திருந்தது.

இஸ்லாமியர்கள் தங்கள் தலையை முழுவதும் மூடியிருக்கும் உடையை அணியவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது ஈரான் அரசு.

ஈரானின் குத்துச்சண்டை அமைப்பு கூட சதார் காதீமுக்கு ஆதரவுக் கரம் நீட்டவில்லை என்பதுதான் வேதனையான செய்தி.

குத்துச் சண்டையில் வெற்றி பெற்ற சதார் காதீம், ஆணாதிக்கத்திடம் தோற்றுப் போனார்.