தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், “முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். விசாரணை அமைப்பிடம் ஆதாரம் இருந்தால், முதலில் குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை குற்றப்பத்திரிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

பலமுறை அமலாக்கத்துறை என் தந்தைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவரும் அவற்றுக்கு மதிப்பு கொடுத்து, ஆஜராகி விசாரணைகளை சந்தித்தித்திருக்கிறார். நாங்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவோம். ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை” என்று தெரிவித்தார்.