வாஷிங்டன் :

உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் மக்கள் தொகையில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதே போல குண்டான குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளிலும் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் 14.4 மில்லியன் குழந்தைகள் அதிக உடல்எடையுடன் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக உடல் எடையுடன் உள்ளனர். இதன் காரணமாக நோய்கள் அதிகரிப்பதோடு,  உயிரிழப்புக்களும்  ஏற்படுகின்றன.

 

2015ம் ஆண்டு  மட்டும் அதிக உடல் சார்ந்த நோய்களால் 4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

 

உடல் எடை அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், அதிக உடல்உடை உள்ள பெரியவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் எகிப்து முதல் இடத்திலும் உள்ளது. உடல் எடை அதிகமானவர்கள் மிக குறைவாக உள்ள நாடுகளில் வங்கதேசும், வியட்நாம் ஆகியவை உள்ளன.

தி நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆப் மெடிசின் என்ற அமைப்பு உலகில்ன் பிரபலமான 20 நாடுகளில் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் குறித்து நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.