நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
கட்சிகள் திமிர்த்தனம் உச்சம் இது..
அதிமுக திமுக போன்ற முக்கிய கட்சிக்குள் இருப்பவர்கள் நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எவன் கேள்வி கேட்கப் போகிறான் என்ற மமதை அக் கட்சிகளின் தலைமைக்கு பல ஆண்டுகளாகவே உள்ளன..
இதன் வெளிப்பாடுதான் கூட்டணி தொகுதி பங்கீடு முடிவு ஆகாமலேயே அனைத்து தொகுதிகளிலும் விண்ணப்பம் வாங்கும் என்கிற அக்கப்போர்..
தான் இருக்கும் தொகுதி தனது கட்சிக்கு கிடைக்குமா அல்லது கூட்டணிக்கு போகுமா என்பதே தெரியாமல் ஒரு நிர்வாகி பணம் கட்ட வேண்டும். அதுவும் பல்லாயிரம் ரூபாய்.
கேட்டால் ஒரே வரியில் பதில் சொல்வார்கள் தொகுதி கூட்டணிக்கு போய்விட்டால் அந்த பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும் என்று..
நீங்கள் பணத்தை திருப்பித் தந்து விடுவீர்கள் அதை மறுக்கவில்லை.
ஆனால் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தனது பரிவாரங்களோடு தலைமைக் கழகத்திற்கு வந்து மனு கொடுத்துவிட்டு எத்தனை ஆயிரம் பேர் போவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் இருந்து 50 பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அவர்கள் வாகனச் செலவு உடன் வருபவர்கள் செலவு..எவ்வளவு கால விரயம்? இதெல்லாம் தண்டமாக போகும் என்பது கட்சித் தலைமைக்கு தெரியாதா?
அந்தந்த கட்சி நிர்வாகிகள் அந்தந்த கட்சித் தலைமைகளை காரித்துப்புங்கள்..
யாருக்கு எந்த தொகுதி என்றே முடிவாகாத நிலையில் எதற்கய்யா எல்லா தொகுதிகளுக்கும் சேர்த்து பணம் வாங்குகிறீர்கள் என்று கேளுங்கள்..
தைரியமிருந்தால் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி மட்டுமே போட்டியிடும் என்று அறிவித்துவிட்டு அனைத்து தொகுதிகளுக்கும் வாங்குங்களேன். உங்களை எவன் எதால் அடிக்கப் போகிறான்?