பிக் பாஸ் மூன்றாவது சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும், போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் கிடைத்திருக்கிறார்கள். ஓவியாவுக்கு எப்படி ஆர்மி ஆரம்பித்தார்களோ அதுபோல் தற்போது லாஸ்லியாவுக்கு ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா என்ன செய்தாலும் அது டிரெண்டாகி விடுகிறது. அவர் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என அனைத்தையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் என்று ஒன்று லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.மேலும் சிலர் அந்த புகைப்படத்தில் இருப்பது லாஸ்லியாவே இல்லை, என்றும் மறுத்து வருகிறார்கள்.