இது மொபைல் ஷோ ரூம் இல்லை : ஐ பி எஸ் அதிகாரி டிவீட்

சென்னை

திருடப்பட்ட மற்றும் காணாமல் போன 1196 மொபைல்களை காவல்துறையினர் கண்டுபிடித்துத் திரும்பித் தந்துள்ளனர்.

மொபைல்கள் உபயோகம் மிக மிக அதிகரித்து வருகிறது.

ஒருவரே பல மொபைல்களை வைத்திருப்பதும் அதிகமாகி வருகிறது.

அதே வேளையில் மொபைல் திருட்டுக்களும் தொலைவதும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு மொபைல்களை தொலைப்போர் மற்றும் திருட்டு கொடுப்போர் காவல்துறையிடம் புகார் அளிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட மொபைல்களை தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த மொபைல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்தது.

இதில் 1196 மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.1.20 கோடி ஆகும்.

இந்த புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரி மகேஷ் அகர்வால்,

இது புதியதாக திறக்கப்பட்டுள்ள மொபைல் ஷோ ரூம் கிடையாது.

பொதுமக்கள் தொலைத்த ரூ.1.20 கோடி மதிப்புள்ள 1196 மொபைல்களை காவல்துறையினர் கண்டுபிடித்து உரியவரிடம் சேர்த்தது

எனப் பதிந்துள்ளார்.