ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும், அதிபல்ர ராபர்ட் முகபே கைது செய்யப்பட்டதாகவும்  செய்திகள் வந்தன. இந்நிலையில், இது வதந்தி என்று அதிபர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டு  தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்த மேஜர் ஜெனரல் சிபுசியோ மூயோ,  இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என்றும் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே அதிபராக பதவி வகித்து வருகிறார். அவருக்கும், துணை அதிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துணை அதிபர் எம்மர்சன் நாங்கா  திட்டமிடுவதாக கூறப்பட்டது. அதன் காரணமாக அவரை நீக்கி அதிரடி உத்தரவிட்டார் அதிபர்.

ஆனால், துணை அதிபரோ, முகாபே ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், பொருளாதார சீரழிவு ஏற்பட்டதாகவும், இதற்கு காரணமாக அவரை சுற்றியுள்ளவர்களும், அவரது உறவினர்களுமே காரணம் என்றும் குற்றம் சாட்டியிலுருந்தார்.

இதன் காரணமாக அங்கு அதிபர்களுக்கு இடையே மோதல் போக்கு உருவானது. துணைஅதிபருக்கு ஆதரவாக அந்த நாட்டு ராணுவ தளபதி இருப்பதாக கூறப்பட்டது. ஜிம்பாப்வேவின் ஆளுங்கட்சி ராணுவ தலைவர் மீது ‘தேச துரோக’ குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.

அதைத்தொடர்ந்து ராணுவ  ஜெனரல்  சிவென்கா, நாட்டில் ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாகவும்,  அதிபர் ராபர்ட் முகாபேவின் ‘ஜானு பிஃப்’ கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த ராணுவம் செயல்பட தயாராக உள்ளது என  ராணுவ ஜெனரல் சிவென்கா கூறியிருந்தார்.

அதே நேரத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை அதிபரின் மனைவி  கிரேஸ் முகாபே, ராணுவ புரட்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அதிபர் மாளிகை உள்ள ஹராரேவை  ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதன் காரணமாக அங்கு ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் ராணுவத்தினர் முதலில் கைப்பற்றினர்.

மேலும்,  நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி  ஏதும் இல்லை என்றும், அரசு ‘நிலையாக’ உள்ளது என  தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதர் ஐசக் மோயோ கூறியுள்ளார்.

மேலும்,  அந்நாட்டு  தொலைக்காட்சியில் தோன்றிய மேஜர் ஜெனரல் சிபுசியோ மூயோ,  இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என்றும் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிக்கை வாசித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், இதுகுறித்து, 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.