விவசாயிகளின் தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணம்!

--

மழை பொய்த்தோ அதீத மழை பெய்தோ விவசாயம் பாதிக்கப்படுவது, கடன்தொல்லை போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

விவசாயிகள் தற்கொலைக்கு முக்கியமான ஒரு காரணம், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது.

இதோ இந்த வீடியோவை பாருங்கள்..

மகராஷ்டிராவில் மாதுளம்பழம் அமோக விளைச்சல் கண்டிருக்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

காரணம், அமோக விளைச்சலை காரணம் காட்டி, கிலோ பத்து ரூபாய் கொடுத்து கூட வாங்குவதற்கு இடைத்தரகர்கள் தயாராக இல்லை.

ஆனால் இதே மாதுளம்பழம் சந்தையில் நூற்றைம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் அரும்பாடுபட்டு மாதுளம்பழத்தை உற்பத்தி செய்த விவசாயிகளோ, செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கின்றனர்.

விரக்தியில்  ஒரு விவசாயி மாதுளம்பழங்களை வீசி உடைப்பதைத்தான் வீடியோவில் காண்கிறீர்கள்.

விவசாயிகள் பல காலமாகவே, “அரிசி, கோதுமைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதைப்போலவே இதர விவசாய பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்” என்று கோரிவருகிறார்கள்.

ஆனால் அரசு கண்டுகொள்வதாக இல்லை.

 

 

#This is one of the reason for the suicide of farmers!