பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சாமானியர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை அடுத்து கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை  போலீசார் மீட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது.

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த வர் அமித் நந்தா. இவர்,  சம்பல்பூர் செல்லும் பேருந்தில் பயணித்தார். அதே பேருந்தில், நான்கு சிறுவர்களை முரட்டு நபர்கள் சிலர் வல்லுக்கட்டாயமாக  ஏற்றியதைக் கண்டார். அந்த சிறுவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படுகிறார்களோ என்ற சந்தேகம் அமித் நந்தாவுக்கு ஏற்பட்டது.

உடனடியாக ஒடிசா மாநில முதல்வர் அலுவலகத்தின் முகவரிக்கு ட்விட்டர் மூலம் புகார் அனுப்பினார்.  இந்த புகாரை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், அம்மாநில போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

பேருந்து அப்போது சென்றுகொண்டிருந்த புல்பானி என்ற இடத்தில் வழிமறித்த போலீசார், அந்த சிறுவர்களை மீட்டனர். அதோடு, சிறுவர்களை கடத்திய மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையும் ன் அருகே நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதோடு, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும்,  புகார் அளித்த அமித் நந்தாவுக்கும்  அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார்.