பாவனா மீது திலீப்புக்கு ஆத்திரம் வர இதுதான் காரணமாம்!

--

பிரபல நடிகை பாவனா கடத்தி பலாத்காரப்படுத்தப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இது.

 

பல்சர் சுனி என்பவருக்கு பல லட்சம் பணம் கொடுத்து, பாவனாவை கடத்தி பலாத்காரம் செய்ய வைத்தார் என்பதுதான் திலீப் மீதான குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறது கேரள காவல்துறை. ஏன் இப்படிச் செய்தார் திலீப்? “திலீப் பல வருடங்களுக்கு முன் நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது 17 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையே நடிகை காவ்யா மாதவனுடன் திலீப்புக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த விசயம் பாவனாவுக்குத் தெரியவர, அவர் மஞ்சுவாரியரிடம் சொல்லிவிட்டார். இதனால் திலீப் – மஞ்சுவாரியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை போய்விட்டது. சமீபத்தில் காவ்யா மாதவனை திலீப் மறுமணம் செய்துகொண்டார்.

தன்னைப் பற்றி தன் (முன்னாள்) மனைவி மஞ்சுவாரியரிடம் பாவனா சொல்லியதால்தான் பாவனா மீது திலீப்புக்கு ஆத்திரம்” என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இன்னொரு விவகாரமும் கூறப்படுகிறது. “கடந்த பல வருடங்களாகவே மலையாள திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்துவருகிறார் திலீப். பட விநியோகம், தயாரிப்பு, ஓட்டல் பிஸினஸ் என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார்.

அவரது சொத்து மதிப்பு நானூறு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். வருமானவரி பிரச்சினையில் சிக்கிவிடக்கூடாது என்பதால் தனது சொத்துக்கள் பலவற்றை பினாமி பெயரில் வாங்கினார். ஒரு கட்டத்தில் பாவனா பெயரிலும் சில சொத்துக்களை வாங்கினார். ஏனென்றால் திலீப்புக்கு மட்டுமின்றி அவரது (முன்னாள்) மனைவி மஞ்சுவாரியருக்கும் நெருங்கிய தோழியாக இருந்தார் பாவனா.

பிறகுதான் திலீப்புக்கும், பாவனாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தனது சம்பாத்தியத்தில் பாவனா பெயரில் வாங்கிய சொத்துக்களை திருப்பித்தரும்படி திலீப் கேட்டார்.

அதற்கு பாவனா மறுத்தார். இந்த ஆத்திரத்தில்தான் ஆட்களை வைத்து பாவனாவை கடத்தி பலாத்காரப்படுத்த திலீப் திட்டமிட்டார்” என்கிறார்கள். எப்படியானாலும் ஒரு பெண்ணை கடத்தி பலாத்காரப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்தானே! தனது முதல் கல்யாணம் உடைந்து போன கோபத்தில் 4 வருடங்கள் கழித்து இதனைச் செய்திருந்தாலும் “இப்போதுதான் கல்யாணமாயிருச்சே. நல்லாயிருக்க வேண்டியதுதானே..

 

இந்த வேலை இவருக்கு எதுக்கு..?” என்கிற ஒட்டு மொத்த மலையாளிகளின் சாபங்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்..! இன்னொரு பக்கம் 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் திலீப், முன்பு பாவனா பெயரில் பினாமியாக வாங்கியிருந்த சில லட்சம் பெறுமானமுள்ள ஏக்கர் நிலத்தை மீட்க முடியாத கோபத்தில் இதைச் செய்தார் என்கிறார்கள்.

 

இன்னும் இன்னும் சொத்து சேர்த்து என்ன செய்யப் போகிறார் திலீப்..? இப்போது சேர்த்து வைத்த அத்தனை நல்ல பெயரும் ஒரே இரவில் காணாமல் போய்விட்டதே..?! இவரை நம்பி வந்த காவ்யா மாதவனின் நிலைதான் பரிதாபம்..! அவரையும் வழக்கில் இழுத்துவிட்டிருக்கிறார் திலீப். இப்போது அவரும் ஜெயிலுக்குள் போகும் நிலைமை. ஒருவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டால் யாராலேயும் காப்பாற்ற முடியாது என்பார்களே.. அது திலீப்பிற்கு சரியாகவே பொருந்தியிருக்கிறது..!