ஏர் இந்தியாவை இழுத்து மூட சரியான நேரம் இது….

நெட்டிசன்

பிரகாஷ் ராமசாமி (Prakash Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு:

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க, இந்த அரசுக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு, இதுதான் என்பது போலத்தெரிகிறது. இதுவரை, சுமார் 50,000 கோடி நஷ்டம் அடைந்ததில், நான் நீங்கள் கட்டும் வரி, பழைய யூபிஏ அரசின் ஜகஜ்ஜாலமாய்..அதிக விலை கொடுத்து தேவையற்று வாங்கிய விமான லீஸ் கடன்கள் ஒருபுறம். இன்னொரு புறம், 14 சத மார்க்கெட் ஷேரோடு முக்கும் சர்வீஸ் வேறு. என்று ஏர் இந்தியா, வென்டிலேட்டரிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

விமான சர்வீஸ்களில் பயணம் செய்ய, ஏதாவது ஒரு உந்துதல் வேண்டும். அப்படி எதுவும் இல்லாத , கொடுமையான சர்வீஸ், 80இன் கனவு கன்னிகளை இன்னமும் இன் ஃப்ளைட் சர்வீஸில் வைத்துக்கொண்டு, சொதப்பலான நேரங்கள், மட்டமான சர்வீஸ்கள்… மற்றும் பழகிப்போன தாமதங்கள்.. எந்த நேரத்திலும் யாராவது ஃப்ளாஷ் ஸ்டிரைக் பண்ணும் வாய்ப்பு கொண்ட..இப்படி ஒரு ஏர்லைன் என்ன பயண சந்தோஷத்தை பயணிகளுக்கு தந்துவிடப்போகிறது?

ஆனால்.. இதை விற்பதுகூட அவ்வளவு எளிதானதுமல்ல. போன வருடம் 3757 கோடிரூபாய் நஷடத்தை காட்டியிருக்கிறது. இதை ஈடுகட்ட, அரசின் வரிவருவாய் போக வேண்டும். இப்படித்தான் பல அரசு வங்கிகள் கூட. எல்லா நஷ்ட கம்பெனிகளை ஏரக்கட்டினால்.. வரி வருமானத்தை, உபயோகமாக, உருப்படியாக மக்களுக்கு செலவிடமுடியும். அதேபோல் அரசியல் வாதிகள் மட்டும் மஹாராஜா மாதிரி இதில் லேட்டாய் வரலாம் என்கிற ஒற்றை காரணத்திற்காகவே இதை தனியார் மயமாக்கலாம்.

மோடி செய்யமுடியவில்லையென்றால்.. வேறு எந்த அரசாலும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அப்படியே இந்த நிலைக்கு கொண்டு வந்த காங். அரசியல்வாதிகள் மீதான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.