கொரியாவுக்கும், அயோத்தியாவுக்கும் 2 மில்லியன் ஆண்டுகளாக தொடர்பு இருப்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் பிறந்த ஊர் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். அதனால் இந்தியாவில் உள்ள புண்ணிய நகரங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கொரியா மக்கள் அயோத்திக்கு வந்து செல்கின்றனர். தங்களது நாட்டு ராணியான ஹியோ ஹ்வாங் ஓகே.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இங்கே வந்து செல்கின்றனர். ராணிக்கு எப்படி இங்கே தொடர்பு என்ற கேள்விகள் பல எழலாம்.

அயோத்தி நகரம் பூமியில் உள்ள சொர்க்கமாக கருதப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த ராணி அயோத்தியில் இருந்து கொரியா சென்றார். அப்போது இங்கிருந்து ஒரு கல்லை உடன் எடுத்துக் கொண்டு படகில் சென்றார். பயணத்தின் போது அந்த கல் கடலின் சீற்றத்தை கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த கல் இருந்ததால் தான் ராணி பாதுகாப்பாக கொரியா வந்து சேர்ந்ததாகவும் நம்பிக்கை உள்ளது.

அவர் அங்க சென்ற பிறகு ஜியுமெக்வன் கயாவின் மன்னரின் முதல் ராணியானார். அவர் திருமணத்தின் போது 16 வயது தான் இருக்கும். இந்த தொடர்பு காரணமாக 70 லட்சத்திற் கும் மேற்பட்ட கொரியா மக்கள் அயோத்தியாவை தங்களது தாய் வீடாக கருதுகின்றனர். 7ம் நூற்றாண்டில் பல கொரிய சாம்ராஜ்யங்களை இணைத்தில் ராணியின் பங்களிப்பு அதிகளவில் இருந்துள்ளது.

இது குறித்து ஹங்யங் பல்லைக்கழக பேராசிரியர் பியுங் மோ கிம் கூறுகையில்,‘‘கொரியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ராணி அயோத்தியாவின் மகள். இந்த வகையில் அயோத்தியா எங்களது தாய் நகரம். ராணி கடல் வழியாக படகில் வந்து மன்னரை திருமணம் செய்துகெ £ண்டார்.

இரட்டை மீன் சின்னம் பொறித்த கல் மத்திய தரைக்கடல் நாடுகளை பூர்வீகமாக கொண்டது. உலகின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்ட அந்த கல் இறுதியாக லக்னோவில் வந்து தங்கிவிட்டது. நேபாளம், பாகிஸ்தான், சீனா, ஜப்பான், கொரியாவின் கிம்கே நகர நுழைவு வாயில் உள்ளிட்ட பழங்காலத்து கட்டடங்களில் இதை காணமுடியும்.

அயோத்தியில் உள்ள மன்னர் குடும்பத்திற்கு இந்த மரபணு தொடர்புகள் குறித்து தெரிவித்தேன். ராணியின் சகோதரர்கள் அயோத்தியின் மன்னர்களாக இருந்துள்ளனர்’’ என்றார். ராணி தனது 157வது வயதில் காலமானார்.