விஜய்யுடன் நான் நடிக்காதது ஏன் தெரியுமா…? கூறுகிறார் லைலா….!

2000களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் லைலா அஜித், சூர்யா, பிரபு தேவா, விக்ரம், மற்றும் பல சிறந்த ஹீரோக்களுடன் அவர் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டில் தன் காதலன் மெஹதியை மணந்தார், இருப்பினும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா எழுதி இயக்கிய ‘ஆலிஸ்’ என்கிற க்ரைம் த்ரில்லரில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் தன் இரு மகன்களுடன் நேர்காணல் ஒன்றில் தோன்றினார் லைலா . அதில் தான் ஏன் நடிகர் விஜயுடன் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.

‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய் தான் நடிக்கவேண்டி இருந்ததாகவும் , ஒரு சில காட்சிகள் படமாக்கியும் விட்டதாக லைலா கூறியுள்ளார் . பின்னர் எதோ சூழ்நிலையால் விஜய்க்கு பதில் சூர்யா அதில் நடித்துள்ளார் . இதனால் எங்கெல்லாம் விஜய்யை சந்திக்க நேர்கிறதோ அங்கெல்லாம் என்னிடமிருந்து தப்பித்து விட்டீங்க தானே என கிண்டல் செய்வேன் என கூறியுள்ளார் லைலா.