சென்னை:

ட்டமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய உயர் பண மதிப்பிழப்பு முடிவை கடந்த வருடம் நவம்பர் 8ம்தேதி இரவு அறிவித்தார் பிரதமர் மோடி.

கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார்.. ஆனால் கருப்புப் பணம் ஒழிந்தபாடில்லை. தவிர, மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இன்னமும் பல தொழில்துறைகள் இயல்பு நிலைக்கு வர முடியாமல் தள்ளாடுகின்றன.

மோடி எடுத்த இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாக சொல்லப்படுபவர் அனில் போகில். புனேவை சேர்ந்த இவர் பொருளாதார நிபுணர் மற்றும் நிதி ஆலோசகர்.

அந்த அதிரடி அறிவிப்புக்கு சில சில மாதங்கள் முன்பு, டில்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை தெரிவிப்பதாக அனில் தெரிவித்தார். அவருக்கு 9 நிமிட அப்பாயின்மென்ட் அளிக்கப்பட்டது.

அந்த சந்திப்பில் அனில் பேசப்பேச… மோடி ஈர்க்கப்பட்டார். 9 நிமிட சந்திப்பு என்பது  2 மணி நேரம் நீடித்தது.

அந்த சந்திப்பின்போது அனில், “இறக்குமதி வரி உட்பட  56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள். ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்யுங்கள். எல்லா விதமான பண பரிமாற்றங்களும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும். வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும். இதனால் கருப்புப்பணம் ஒழியும். வரி ஏய்ப்புகள் தடுக்கப்படும்” என்றெல்லாம் அனில் கூறினார்.

இறுதியில், உயர் பண மதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்க முதல்படியாக இருக்கும் என்பதே இந்த ஆலோசனையின் நிறைவில் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், முறையான முன்னேற்பாடுகள் இல்லாத்து, வங்கி அதிகாரிகள் முதல் நிதித்துறை அதிகாரிகள்வரை கை கோர்த்து செய்த மோசடிகள், அதிகாரத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சிலர் செய்த மோசடி வேலைகள் ஆகியவற்றால் இந்த முடிவு பெரும் தோல்வி அடைந்த்து.

மக்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர, கருப்பு பண ஒழிந்தபாடில்லை.