உலகை கலக்கும் _ஃபோட்டோ: ஆண் பிரதமரின் “கணவர்”!!

ப்ருசெல்ஸ்:

ப்ருசெல்ஸ் நகரில் நடந்த நேட்டோ நாடுகளின் மாநாடு முடிந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அதிபர்களின் மனைவி வரிசையில்  லக்ஸெம்பர்க் பிரதம மந்திரி ஸேவியர் பெட்டலின் ஓரின கணவன் கௌதியர் டெஸ்டினே காணப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது

லக்ஸெம்பர்க் இல் ஓரினத்திருமணம் சட்டபூர்வமாக்கப் பட்டபின் 2015ல் பெட்டல் – டெஸ்டினே திருமணம் நடை பெற்றது.   பெட்டல் பிரதமாராகும் முன்பிருந்தே, அதாவது  2013 ல் இருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதும், இருவரின் உறவும் ஊரறிந்த ஒரு உண்மை.  பெட்டலுக்கு இது போல பல தொடர்புகள் இருப்பினும்,  அவரின் சட்டபூர்வ மனைவி(?) டெஸ்டினே மட்டுமே.  மாநாட்டில் விருந்துக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில்,  ஃப்ரான்ஸ், துருக்கி, அமெரிக்கா, ஸ்லோவெனியா, நார்வே, ஐஸ்லேண்ட், பல்கேரியா, பெல்ஜியம் நாட்டின் அதிபர்களின் மனைவியும், பெல்ஜியம் நாட்டின் ராணியும் உள்ளனர்.

 

ஆர்க்கிடெக்ட் ஆக தொழில் புரியும் டெஸ்டினே தனது ஓரினத்துணை பெட்டலுடன் நிறைய பொது நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளார்.  பல அரச குடும்ப திருமணங்களிலும், போப் ஆண்டவர் நிகழ்த்திய நிகழ்விலும் இருவருமே கலந்துக் கொண்டுள்ளனர்.    பெட்டல், தனது துணையை அழைக்காத எந்த ஒரு நிகழ்விலும் கலந்துக் கொள்வதில்லை என்பதில் ஸ்திரமாக உள்ளார்.

ஒரு பேட்டியின் போது,  முன்பெல்லாம் அழைப்பிதழில் திரு அண்ட் திருமதி என குறிப்பிடப் பட்டிருந்ததாகவும்,  இப்போது அப்படி இல்லாமல் நேரடியாக இருவரையும் அழைப்பிதழில் குறிப்பிடுவதாகவும் கூறிய அவர் தற்போது தன் துணைவரை அழைக்காவிடில் தானும் வரமாட்டேன் என்பது அனைத்து மக்களின் எண்ணத்திலும் பதிந்து விட்டதாகவும் கூறுகிறார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது போய் ஒருவனுக்கு ஒருவன் ஆகிவிட்டது