பழையதை மறக்காத தோனி: சமூக வலைதளங்கள் பாராட்டு!

கொல்கத்தா:
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தேநீர் கடை நடத்திவரும் தன் சிறுவயது நண்பரை சந்தித்து உரையாடி மகிழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புகழ் உச்சிக்கு வந்தவர்களில் பலர் பழைய வாழ்வை மறந்தவர்களாகத்தான் உள்ளனர். ஆனால், கிரிக்கெட் உலகில் பிரபலமடைந்திருக்கும் தோனி கடந்தகால
நினைவுகளை மறந்துவிடாமல் சிறுவயது நண்பர்களுடன் அமர்ந்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கொல்கத்தா நகரில் இருக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த நிகழ்வை உதாரணமாக சொல்லலாம்.
விளையாடுவதற்கு மைதானத்திற்கு வந்த தோனி, அறையிலிருந்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே தனது
சிறுவயது நண்பன் தாமஸ் தன்னைக் காண காத்துக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டார்.

தனது நண்பன் தாமஸ்தான் என தெரிந்ததும் ஓடிசென்று கட்டித் தழுவிக் கொண்டார். அத்துடன் தாமஸூடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த போட்டோசமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தோனியின் நண்பர் தாமஸ் கரக்பூர் ரயில்வே நிலையத்தில் டீ கடை நடத்திவருகிறார்.
டீ கடை நடத்திவரும் தனது ஏழ்மையான நண்பரை 13 ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காமல் சந்தித்து உரையாடிய தோனியை சமூகவலை
தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.