இந்த ஒரு டிவி -யை வாங்குவதற்கு பேசாமல் ஆடி கார் வாங்கிடலாமே..!

8K தொலைக்காட்சிகள் இன்று பரவலாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டன என்றாலும், அவற்றின் விலைதான் தொடர்ந்து பேசு பொருளாக இருக்கிறது.

தற்போது சோனி நிறுவனம், 98 இன்ச் OLED 8K தொலைக்காட்சி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அதன் விலையைக் கேட்டு உங்களுக்கு தலைசுற்றலோ அல்லது மயக்கமோ வந்துவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

வருகின்ற ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Z9G மாடல் தொலைக்காட்சிதான், தற்போது சோனி தயாரிப்பு தொலைக்காட்சிகளிலேயே அதிக விலை உயர்ந்ததாக இருக்கும்.

அதன் விலை $70,000 (தோராயமாக ரூ.50,00,000). இந்தப் பணத்தில், நீங்கள் ஒரு 4k OLED தொலைக்காட்சியும், ஒரு ஆடி A4 காருமோ அல்லது ஒரு BMW 3 வகை கார்களில் ஒன்றையோ வாங்கலாம். அப்படி வாங்கினாலும்கூட, சில லட்சங்கள் மிச்சமாகும்.

ஆனால், இந்த மொத்தப் பணமும் ஒரு Z9G தொலைக்காட்சி மட்டுமே வாங்குவதற்கு தேவைப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.