பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொள்ள மாட்டோம்: குஜராத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி

அகமதாபாத்:

பெற்றோர் சம்மதம் இன்றி வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என குஜராத் மாநிலம் சூரத்தில் காதலர் தின உறுதிமொழியை மாணவ,மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.


தன்னார்வு அமைப்பு ஒன்று காதலர் தினத்தையொட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பிப்ரவரி 14-ல் காதலர் தினம் கொண்டாடுகின்றனர். இது நமது கலாச்சாரத்துக்கு ஏற்றது அல்ல. யாரும் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. பெற்றோரின் முக்கியத்துத்தை உணர்த்து வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.