டில்லி

ந்த வருடம் இந்தியாவில் மழை பெய்வது குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்ற வருடம் பருவ மழைக் காலம் தவறி தாமதமாகப் பெய்தது.  இது கடந்த 25 வருடங்களில் நடக்காத ஒன்றாகும்.  முதலில் மெதுவாகத் தொடங்கிய மழை பிறகு கனமழையாகி கோடைப்பயிர் அறுவடையைப் பாதித்தது.  அதன் பிறகு மேலும் வலுவாகிப் பல மாநிலங்களில் பயிர்கள் பாழாகின.   ஒரு நல்ல கனமழை பயிர் நிலங்களுக்கு வளம் அளிப்பதற்குப் பதில் காலம் தவறியதால் அழிவை அளித்தது.

இந்திய வானிலை மையம் இந்த வருடத்துக்கான தென் மேற்கு பருவ மழை சாதாரணமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.  தென் மேற்கு பருவ மழை நாட்டின் மொத்த மழையில் 70% வரை அளிக்கிறது.  இந்த வருடம் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை சராசரி அளவில் 100% பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 1961 முதல் 2010 வரையான சராசரி மழை அளவு 88 செமீ ஆகும்.

கேரளாவில் வழக்கம் போல் ஜூன் 1 முதல் மழை பெய்யும் என அறிவிக்கபட்டுளது.  மற்ற சில பகுதிகளில் இது மாறலாம் எனக் கூறப்படுகிறது.  குறிப்பாக மேற்கு, மத்திய, மற்றும் கிழக்கு மாநிலங்களில் 3 முதல் 7 தினங்கள் சீக்கிரமாக மழை தொடங்கி தாமதாக முடிய வாய்ப்புள்து.  வடமேற்கின் மிகத் தூரமான பகுதியான ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்   ஜூலை 15க்கு பதில் ஜூலை  8 ஆம் தேதி தொடங்க உள்ளது.

அதைப் போல் தென் மேற்கு பருவ மழை வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் முடிவடைவது ஒன்று அல்லது இரண்டு வாரம் தாமதமாக முடிவடையக் கூடும் எனக் கூறப்படுகிறது. தென் இந்தியாவில் மழை முடியும் காலம் வழக்கம் போல் அக்டோபர் 15 ஆம் தேதி வாககில் அமைய வாய்ப்புள்ளது.

மும்பையில் மழை ஒரு நாள் தாமதமாக அதாவது ஜூலை 12 முதல் தொடங்கி 9 நாள் தாமதமாக அதாவது செப்டம்பர் 29க்கு பதில் அக்டோபர் 8 ஆம் தேதி முடிவடையும்., டில்லியில் நான்கு நாட்கள் தாமதமாக ஜூன் 27ல் தொடங்கி 3 நாட்கள் தாமதமாகச் செப்டம்பர் 25 ல் முடிவடையும்.  வேறு பல நகரங்களிலும் இந்த பாதிப்பு இருக்கும்.