இந்தியாவில் திருமணம் என்பது ஒரு  ஆடம்பர நிகழ்வு.
நம் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் திருமணத்திற்காக ஒரு லட்சம் கோடி செலவிடப்படுகின்றது. இந்திய  பட்ஜெட்டில் இது 6 % ஆகும். (இந்திய அரசின் ஒரு ஆண்டு பட்ஜெட் 16 லட்சம் கோடி ஆகும்).
ஒரு உன்னத நோக்குடன், தங்களின் திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளனர் ஒரு இளம் காதல் ஜோடி. அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

No-Band-Baja-Weeding-768x512
திருமணக் கோலத்தில் அபய் மற்றும் பிரித்தி. படம்: முகநூல்

 
நாக்பூர், இந்திய நிதித் துறையில்,  ஐ.ஆர்.எஸ். அலுவலராய் பணிபுரியும் அபய், ஐ.ஐ.டி டில்லியில் மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றவர்.
பிரித்தி கும்பாரே ஐ.டி.பி.ஐ வங்கியில் மேலாளராகப் பணிபுரிகின்றார்.
முன்னதாக இருவரும் இந்திய அரசுப்பணித் தேர்விற்கு  படிக்கும்  பயிற்சி வகுப்புப் பயிலும்  போது காதல்வயப் பட்டனர்.
இம்மாத முதல் ஞாயிறன்று ( ஜூலை 3),  அபய் தேவாரே மற்றும் பிரீத்தி கும்பாரே தங்களின் திருமணம் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு கருத்தை விதைத்துள்ளனர்.
அம்ராவதியில் உள்ள அபியாந்தா பவனில் நடைபெற்ற இவர்களின் திருமண விழாவில் எந்தச் சடங்கும் நடைபெறவில்லை.
திருமணச் செலவு பணத்தை அவர்கள் :
1. விவசாயம் பொய்த்து , கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்ட 10 விவசாயிகளின் குடும்பத்திற்கு  தலா ₹. 20,000 நிதியுதவியாய் அளித்துள்ளனர்.
2. அம்ராவதியில் உள்ள 5 நூலகங்களுக்கு, ₹ 52 ஆயிரம் மதிப்புள்ள “போட்டித்தேர்விற்கு தயார் செய்யும் புத்தகங்களை நங்கொடையாய் வழங்கியுள்ளனர்.
3. திருமணத்தின் உணவு மெனுவை எளிமையாக்கினர்.
4. சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு பயனுள்ள மற்றும் உத்வேகம் அளிக்கக் கூடிய உரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்களை அவர்களது முகநூல் பக்கத்தில்  வாழ்த்துவோமே !!
இவர்களின் திருமணப் பத்திரிக்கை:
invi