திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நலப்பணிகளில் ஈடுபட்டு வந்த  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.  முதன்முதலாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திமுக, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.

சமீபத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு.  வருகிறது. அவரது உதவியாளர்கள், கார் டிரைவர், மனைவி, மகன், வீட்டில் வேலை செய்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

அதுபோல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏவான மஸ்தானுக்கு, கடந்த மாதம் 28ம் தேதி தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தற்போது,  கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுஉள்ளார்.
களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி