‘திட்டம் இரண்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய்சேதுபதி….!

--

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.’க/பெ ரணசிங்கம்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இடம் பொருள் ஏவல்’ போன்ற கதைகளை கைவசம் வைத்துள்ளார் .

இவை தவிர்த்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் மிஸ்ட்ரி த்ரில்லர் படமான ‘திட்டம் இரண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் .

இப்படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன், எடிட்டராக சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.