பூஜையுடன் ஆரம்பித்தது ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘தோள் கொடு தோழா’…!

பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ’தோள் கொடு தோழா’ . இப்படத்தில் அக்‌ஷிதா, ஜெயஸ்ரீ , ஹரி, ராகுல், பிரேம் , நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை உட்பட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டு அன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில், கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோ பீட்டர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கெளதம் இயக்க எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்கிறார்.

மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் ஆகிய இடங்களில் படமாக்க உள்ளார்கள்.

கார்ட்டூன் கேலரி