புதுடெல்லி: டென்மார்க் நாட்டில் நடைபெறவிருந்த தாமஸ் மற்றும் உபெர் கோப்பை இறுதி பேட்மின்டன் தொடர், அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இத்தொடரில் கலந்துகொள்ளவிருந்த இந்தோனேஷியா, தென்கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா தைபே, அல்ஜீரியா, சிங்கப்ழூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் கொரோனா அச்சம் காரணமாக விலகின. அப்பட்டியலில் ஜப்பானும் விலகப்போவதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் கூட்டம், இதுதொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், டென்மார்க் பேட்மின்டன் அமைப்பிடம் கலந்தாலோசித்து, தொடரை அடுத்தாண்டு ஒத்திவைப்பது குறித்து சம்மதம் பெறப்பட்டு, அடுத்தாண்டு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், டென்மார்க் ஓபன் போட்டி, திட்டமிட்டபடி அக்டோபர் 13ம் தேதி துவங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், டென்மார்க் மாஸ்டர்ஸ் போட்டி ரத்துசெய்யப்பட்டது.