Random image

ஸ்டெர்லைட் அமிலப் பொருட்கள் 30 நாட்களில் அகற்றப்படும்….கலெக்டர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களிடம் கூறுகையில், “மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் சல்பியூரிக் ஆசிட் கசிவைப் போல் வேறு ஏதும் ஆசிட் கசிவுகள் உள்ளதா? என்பது குறித்தும், இதர சேமிப்புக்கலன்களின் இருப்பு நிலை, அதன் தன்மைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

சப் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஓய்வுபெற்ற சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர், அண்ணா பல்கலை க்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், ம £நகராட்சி ஆணையர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு இந்த ஆய்வில் ஈ டுபட்டது.

ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கியுள்ளது. 30 நாட்களுக்குள் மீதம் உள்ள ஆசிட் மற்றும் மூலப் பொருள்கள் வெளியேற்றப்படும். ஜிப்சம் கூடுதலாக இருப்பு உள்ளது. இதை வெளியேற்ற ஆலை நிர்வாகம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலம் பம்பிங் செய்து லாரிகளில் வெளியேற்றப்படும்‘’ என்றார்.