தூத்துக்குடியில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது.

இதை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் நடந்து வந்த அண்ணா பல்லைக்கழகத்தை சார்ந்த கல்லூரிகளின் தேர்வுகள் நாளை முதல் 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 5 முதல் 7ம் தேதி வரையிலும் நடக்கும். 28ம் தேதி முதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.