சென்னை:

தூத்துக்குடியில் நேற்று மற்றும் இன்றும் தொடர்ந்து வரும் துப்பாக்கி சூடு காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர். தமிழகஅரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நெல்லை மாவட்ட ஆட்சியர்  சந்தீப்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவி மக்களை வேட்டையாட உத்தரவிட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில்,  துப்பாக்கிச்சூடு எதிரொலியாக  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆட்சியர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக  நெல்லை மாவட்ட சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.