சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக தமிழகஅரசு தலைமை செயலாளரை சந்தித்து மனு கொடுக்க பாரதிராஜா தலைமையில்  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பை சேர்ந்த அமீர், திருமுருகன் உள்பட பலர்  தலைமை செயலகம் சென்றனர்.

அவர்களிடம் மனு வாங்க தலைமை செயலாளர் உள்பட  அரசு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து  பாரதிராஜா உள்பட தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.