சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால் பிரச்சனை எற்பட்டதாகவும், போராட்டக் காரர்களில் சிலர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்  கலவரத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவையும் மீறி சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினர்.போராட்டத்தில் ,வேண்டுமென்றே சில கட்சிகள் அமைப்புக்கள் வன்முறையை தூண்டின.

போலீசார்  கலவரத்தில் ஈடுபட்டவர்களை  கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும்  கலைந்து செல்லாத காரணத்தினால் போலீசார் துப்பாக்கி சூடு  நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வன்முறையின்போது காயம் அடைந்தவர்களை  அமைச்சர்கள் நேரில் சென்று  சந்தித்து ஆறுதல் கூறினர் என்றும், இந்த சம்பவம்  குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியில் அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்கள் உணர்ச்சி வசப்படாமலும் யாருடைய தூண்டுதலுக்கு ஆளாகாமலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.