கன்னியாகுமாரி:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் இன்று கடலில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் கன்னியாகுமரி அருகே  குரும்பனை பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக  அப்பகுதியிலுள்ள இன்னாசி தேவாலயத்தில் இருந்து கருப்பு கொடிகளுடன் ஊர்வலமாக வந்த மீனவர்கள், கடலில் இறங்கி, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்தும் கோஷமிட்டு போராட்டம் செய்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.