தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

மதுரை:

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராட்டித் தனமாக  துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த  வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரிக்கிறது.

தூத்துக்குடியில், அமைதி வழியில் போராடிய  மக்கள்மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியானர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் காயம் அடைந்தவர்களுக்கு உயர்ரக சிகிச்சை தரக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.