தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துரதிர்ஷ்டவசமானது…..டிஜிபி

தூத்துக்குடி:

தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விபரம் கேட்டறிந்தார்.

இது குறித்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும். அமைதியை நிலைநாட்ட மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. கவலை அளிக்கக் கூடியது’’ என்றார்.