(பைல் படம்)

சென்னை:

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காவு கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையின் காட்டுமிராட்டித்தனமான இரக்கமற்ற செயலை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கண்டித்து, சென்னை மெரினாவில் கூட இருப்பதாக தகவல்கள் பரவியதாக கூறப்படுகிறது.

மேலும் பல அமைப்புகள் கோட்டையை  முற்றுகையிடப்போவதாகவும் அறிவித்துள்ளன

இதன் எதிரொலியாக சென்னை மெரினாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா உள்சாலையில் வாகனங்களை அனுமதிக்க போலீசார் மறுத்து வருகின்றனர். மேலும் சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களையும்  பலத்த சோதனைக்கு பிறகே  அனுமதிக்கின்றனர்.

இதன் காரணமாக சென்னை கடற்கரை பகுதியும் பரபரப்பாக காணப்படுகிறது.