தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சென்னையில் ஐடி ஊழியர்களின் அமைதியான எதிர்ப்பு

சென்னை:

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் அமைதியான முறையில் தங்களை எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை காஞ்சிபுரம் எல்லையில் இருக்கும், மஹிந்திரா சிட்டி மற்றும் சென்னை ஓஎம்ஆர் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள்  இன்று காலை அலுவலகம் வந்தவுடன் எல்லா பணியாளர்களும் சேர்ந்து சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். . கைகளில் பதாதைகளை ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் அமைதியான முறையில் சாலையோரங்களில் நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த பதாதைகளில்  ஸ்டெர்லைட் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளையும், அதற்கான விழிப்புணர்வையும் அந்த போர்டுகளில் எழுதி இருந்தனர்.  சாலை ஓரத்தில் போராட்டம் நடத்தினார்கள். மனித சங்கிலி போல வரிசையாக நின்று போராட்டம் நடத்தினார்கள்.