தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் காரணமாக  ஐடி ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.

கள்ளக்காதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி அருகே சண்முகபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராக அமெரிக்காவில் பணி புரிந்து வருகிறார். இதன் காரணமாக இவருக்கு அமெரிக்கா அரசு கிரீன் கார்டு கொடுத்துள்ளது.

இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விவாவகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 22-ம் தேதி, வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை சந்திக்க செல்வதாக தனது காரில் நெல்லை புறப்பட்டு சென்றார்.

அவர் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் அவரை தேடினர். இதையடுத்து தூத்துக்குடி போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முத்துகிருஷ்ணனின் டெலிபோன் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், மாயமான முத்துகிருண்ஷனின் ஏடிஎம் கார்டு மூலம் மர்ம நபர் பணம் எடுத்து செல்வது தெரிய வந்தது.

இதற்கிடையில் வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் இருந்த முத்துகிருஷ்ணனுக்கு மெசேஜ் வந்த தகவலும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், அந்த பெண்ணுடன் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண், முத்துகிருஷ்ணன் வழக்கறிஞர் அலுவலகம் வரும்போது தன்னுடன் பேசியதால், தனது கணவர் தகராறு செய்ததை சுட்டிக்காட்டி யிருந்தார்.

அதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் கணவரான ராஜகோபாலை பிடித்து விசாரித்தனர். அதில் முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது

மேலும் நடைபெற்ற விசாரணையில், முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு, காரோடு கல்குவாரி குளத்தில் மூழ்கடிக்கப்பட்டது தெரிய வந்தது.

அதையடுத்து, முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு விரைந்த காவல்துறையினர்,  தீயணைப்புதுறையினரின் உதவியுடன் கல்குவாரி குளத்தில் இருந்து முத்து கிருஷ்ணனின் காரை மீட்டனர்.

காரின் ஓட்டுனர் இருக்கையில் முத்து கிருஷ்ணன் அழுகிய நிலையில் சலமாக கிடந்தார்.

பாபநாசம் சினிமா பாணியில் நிகழ்ந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு விவாகரத்து கோரிய முத்து கிருஷ்ணன், வழக்கறிஞர் அலுவலக ஸ்டெனோவுடன் ஏற்பட்ட குறுந்தகவல் தொடர்பால் பரிதாபமாக உயிரை இழக்க நேர்ந்ததாக போலீசார் கூறினர்.