சென்னை:

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏவுமான தோப்பு  வெங்கடாச்சலம், தான் வகித்து வந்த அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ்-சுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதன் காரணமாக அதிமுக மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பூசல் காரணமாக ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் டிடிவி அணிக்கும், திமுகவுக்கும் தாவி வருகின்றனர். இந்த நிலையில்,  முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர்,  பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் தோப்பு வெங்கடாசலம் எழுதியுள்ளார்.  அதில், கடிதத்தில் ,தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும், அதிமுகவில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்  என்று தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக எடப்பாடி அரசுக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.  சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் குறைந்துகொண்டே செல்லும்  நிலையில், தற்போது எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சிப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளது எடப்படி அரசுக்குமேலும் பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரும் 23ந்தேதி வெளியாக உள்ள வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவுக்கு குறைந்த பட்சம் 10 எம்எல்ஏக்களாவது கிடைக்கவில்லையெனில், ஆட்சியின் ஆயுட்காலம் நித்திய கண்டனம்தான். இந்த நிலையில்,  தற்போது,  பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலம தான் வகிக்கும் கட்சிப்பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில்,  கட்சியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

தோப்பு கட்சியில் இருந்து வெங்கடாசலம் விலகி தனது பதவியை ராஜினாமா செய்தால், , சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு மேலும் பலம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.