சென்னை:
விமானப் பயணிகளின் வசதிக்காக  சென்னை உள்நாட்டு விமான நிலையில் இ.பாஸ் பெறும் வசதி செய்யப்பட்டு உள்ளது. விமானப் பயணிகள் அங்கிருந்தே இ.பாஸ் அப்ளை செய்து,  பெற்றுக் கொள்ளலாம் அன்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிகைக்காக அறிவிக்கப்பட்ட 4வது கட்ட ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்றுமுதல் (மே25) உள்நாட்டு விமான சேவைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, கொல்கத்தா, மும்பை, டில்லி, அந்தமான், உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளன.
அதுபோல டெல்லி, மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை முதல் விமானம் டெல்லியில் இருந்து சென்னை வந்தது. அதைத் தொடர்ந்து, காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து முதல் விமானம் டெல்லி புறப்பட்டது.
இதற்கிடையில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகள் கண்டிப்பாக இ.பாஸ்பெற வேண்டும், கொரோனா சோதனை மேற்கொள்ளவேண்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான சேவைப்பகுதியில் உள்ள ஓய்விடத்தில், பயணிகளின் வசதிக்காக இணையவசதியுடன் கனிணி சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்கள் வருகை மண்டபத்தில் உள்ள கவுண்டர்களிட மிருந்து டி.என்-பாஸையும் பெறலாம், என்றும், பயணிகள் ஆன்லைனில் டி.என் இ-பாஸ் போர்ட்டல் மூலமாகவும் பதிவு செய்யலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.