ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500க்கு 19 பொருட்கள் : அரசு உத்தரவு

--

சென்னை

மிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது.

இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அதையொட்டி அர்சு இந்த பொருட்களை ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் வாக்கிக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.  அத்துடன் எத்தனை செட்டுகள் தேவைப்பட்டாலும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

ரூ. 500க்கு அளிக்கப்படும் 19 பொருட்கள் விவரம் இதோ :

துவரம் பருப்பு – 1/2 கிலோ

உளுத்தம் பருப்பு – 1/2 கிலோ

கடலைப்பருப்பு – 1/4 கிலோ

மிளகு -100 கிராம்

சீரகம் -100 கிராம்

கடுகு -100 கிராம்

வெந்தயம் -100 கிராம்

புளி -250 கிராம்

பொட்டுக்கடலை -250 கிராம்

நீள மிளகாய் -150 கிராம்

தனியாத்தூள் -200 கிராம்

மஞ்சள் தூள் -100 கிராம்

டீ தூள் -100 கிராம்

உப்பு -1 கிலோ

பூண்டு -250 கிராம்

கோல்டுவின்னர் சமையல் எண்ணெய் -200 மில்லி

பட்டை -10 கிராம்

சோம்பு -50 கிராம்

மிளகாய் தூள் -100 கிராம்