புதுச்சேரி:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வெளிநாடு, வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள், அரசு அறிவித்துள்ள இணையதளத்தில்  பதிவு செய்யலாம் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 2 முறை அமல்படுத்தப்பட்ட  நிலையில் 3வது முறையாக மேலும் வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது.
மே 1ந்தேதியான “தொழிலாளர் தினத்தில்இருந்துஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்இயக்க முடிவு ரெயில்வே செய்யப் பட்டுள்ளது.   சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில், இடையில் வேறு எங்கும் நிற்காமல், புறப்பட்ட இடத்தில் இருந்து சேருமிடத்துக்கு நேரடியாக சென்று சேருவதாக இந்த ரயில் சேவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து சிக்கி தவிப்பவர்களை புதுச்சேரி கொண்டுவர புதுச்சேரி அரசின் சார்பில் welcomeback.py.gov.in என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில்பதிவு செய்யும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் புதுச்சேரி திரும்ப விரும்புபவர்கள் கட்டணமில்லா எண் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.