செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இறந்தவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல என்பதும், அவர்கள் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி  ஆயிரத்துக்கம்  மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எப்போதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. கொரோனா சிகிச்சை மற்றுமின்றி பல்வேறு நோய்களுக்கும் அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு நிரம்பி உள்ளது. மேலும், அங்குள்ள ஐசியு உள்பட பல்வேறு வார்டுகளும், மற்ற நோய்களின் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவர்கள் நிரம்பி உள்ளது.

இநத் நிலையில்,நேற்று நள்ளிரவு ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 பேர் திடீரென உயிரிழந்தனர்.  அவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகள் என்று தகவல்கள் பரவின.  ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் பரதவின. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது. இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, உயிரிழந்த நோயாளிகள் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது உறுதியானது. மூச்சுத்திணறல் மட்டுமின்றி பல்வேறு நோய் பாதிப்பு காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, ஆக்சிஜன் சென்றுகொண்டிருந்த குழாயில்  துரதிருஷ்டவசமாக  ஏதோ சிக்கல் ஏற்பட்டு, ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,  ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த  நோயாளிகள் 11 பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.பலியானர்வர்களின் உடல்கள் இன்று காலை அவர்களது உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கூறிய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ்,   “செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர கொரோனா தொற்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது மருத்துவமனையில் 23000 கிலோ கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கர்கள் உள்ளன. இதில் தினமும் 2.5 ஆயிரம் கிலோ மட்டுமே நோயாளிகளின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது”. பலியானவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல. அவர்கள் ஏற்கனவே ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்  என்று தெரிவித்தார்.